ஆசிரியர் பதவி நேர்காணலுக்கு சென்று சோகமாய்த்திரும்பிய என் பழைய மாணவர் ஒருவரின் கதை கேட்டு எழுதியது...
கனவா? காசா? ( காசு, பணம், துட்டு, மனி..மனி...)
“கனவு
காண்”-
வாசகம் சுவாசமானது.
கனவு
பலிக்க தூக்கம் துறந்தேன்.
“நிலவைக்குறிவை நட்சத்திரம் கிட்டும்”
இதையும்
செய்தேன்.
நிலவு
கிடைக்கவில்லை.
நட்சத்திரம் தட்டும்போல் இருந்தது --
பேராசிரியர்தான் ஆகவேண்டும்…
பரவாயில்லை
பள்ளி
ஆசிரியர் தேர்வுக்கு வந்தேன்…
கேள்வியோடு "இன்னொன்றும்" கேட்டார்கள்...
நட்சத்திரமும்
நழுவிப்போனது !
கனவுச்சிறகுகள்
கருக கண் விழித்தெழுந்தேன்...
அய்யய்யோ
!!!
கனவு
காண செலவிட்ட நேரத்தில்
கொஞ்சம்
காசும் சேர்த்திருக்கலாமோ !
No comments:
Post a Comment